ரவீந்திரனால் ஆண்கள் டீமுக்கு பின்னடைவு.. போட்டுடைத்த பிக் பாஸ் போட்டியாளர்

9

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க பிக் பாஸ் 8 பிரமாண்டமாக துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த நிலையில், நேற்று முதல் நாளே ஒரு எலிமினேஷன் நடைபெற்றது.

இதில் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் சாச்சனா பிக் பாஸ் 8ல் இருந்து வெளியேற்றப்பட்டார். முதல் எலிமினேஷன் நடைபெற்று முடிந்த நிலையில், நேற்று மாலை கேப்டன் யார் என்று தேர்ந்தெடுக்க கடும் போட்டி நடைபெற்றது.

ஆண்கள் vs பெண்கள் என நடைபெற்ற இந்த போட்டியில் பெண்கள் அணியில் இருந்து தர்ஷிகா முதல் வாரத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த போட்டியில் ரவிந்தருக்கு கால்களில் வலி ஏற்பட்டு அவர் போட்டியில் இருந்து வெளியேறினார். இதுவரை இல்லாத அளவில் முதல் நாளே நாமினேஷன் நடைபெற்றது.

இதில் அதிக நாமினேஷன் பெற்றவர் ரவீந்திரன். இந்நிலையில், ரவீந்திரனை நாமினேட் செய்தது ஏன் என்பதை குறித்து சீரியல் நடிகர் அருண் பேசும்போது, “‘ரவீந்திரனால் கொடுக்கப்படும் டாஸ்க்கில் சரியாக விளையாட முடியவில்லை, இந்த போட்டி ஆண்கள் Vs பெண்கள் என இருப்பதால் ஆண்கள் பக்கம் ஒரு தொய்வு ஏற்படுகிறது’ என்று கூறியுள்ளார்.

Comments are closed.