இந்திய (India) விமானப்படையின் 92 ஆம் ஆண்டு தினத்தை ஒட்டி மாபெரும் விமான சாகச நிகழ்வு (06) இடம்பெற்றுள்ளது.
விமான சாகச நிகழ்ச்சியை பத்து லட்சம் பேர் கண்டுகளிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் மெரினா (Marina) கடற்கரையில் மட்டும் சுமார் நான்கு லட்சம் மக்கள் விமான சாகசங்களை கண்டு களித்துள்ளனர்.
உலங்கு வானூர்தி தொடங்கி, மிக், மிராஜ், தேஜஸ், ரஃபெல் மற்றும் சுகாய் உள்ளிட்ட 72 போர் விமானங்கள் காண்போரைக் கவர்ந்திழுக்கும் வகையில் ஏரோபாட்டிக் வான் சாகசங்களில் ஈடுபட்டுள்ளன.
20 வகையான அணிகளை சேர்ந்த விமானிகள் வானை வர்ணஜாலமாக்கிய நிலையில் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்ற விமானக் குழுக்களுக்கு சேரா, சோழா, பல்லவா, காவிரி, காஞ்சி, தனுஷ் மற்றும் மெரினா என தமிழில் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகள் கொண்ட ஜாகுவார் விமானங்கள் விண்ணில் வலம் வந்து சாகசத்தில் ஈடுபட்டன.
சிறிய இலகுரக சூப்பர் சோனிக் விமானமான, தேஜஸ் விமானங்களும் சீறிப்பாய்ந்து மெரினா கடற்கரையை அதிர வைத்து ஆச்சரியப்படுத்திய நிலையில் பல்வேறு ஆச்சர்ய சாகசங்களை தொடர்ந்து ஒரு மணியளவில் நிகழ்ச்சி நிறைவுற்றமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.