எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடும் மாவட்டங்கள் தொடர்பில் இறுதித் தீர்மானம் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் பொதுத் தேர்தலில் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் அதிகூடிய வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவான ஹம்பாந்தோட்டை மாவட்ட மக்களுடன் இணைந்து தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில் தான் குருநாகலில் போட்டியிடவுள்ளதாக விளம்பரப்படுத்துவது வெறுமனே அரசியல் ஆதாயம் தேடும் மக்களை தவறாக வழிநடத்துவதாகும் என நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
Comments are closed.