மது ஒழிப்பு குறித்து அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

14

இலங்கையில் மது பாவனையை குறைப்பதற்கான முறையான வேலைத்திட்டமொன்றை நடைமுறைபடுத்துமாறு அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், உலக மது ஒழிப்பு தினம் இன்றாகும். உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 மில்லியன் மக்கள் மதுவால் இறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மது பாவனையினால் நாளொன்றுக்கு ஏறக்குறைய 50 பேர் உயிரிழப்பதாக கூறப்படுகிறது.

மேலும் வருடாந்தம் 237 பில்லியன் ரூபா நோயாளர்களுக்காக அரசாங்கம் செலவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது என கூறியுள்ளார்.

Comments are closed.