அதிகரித்துள்ள போர் பதற்றம்: இஸ்ரேலுக்கான விமான பயணங்கள் இரத்து

13

இலங்கை – இஸ்ரேலுக்கான விமான பயணங்கள் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 7ம் திகதி வரையில் இந்த விமான போக்குவரத்து இரத்து செய்யப்படுவதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமால் பண்டார அறிவித்துள்ளார்.

ஈரான் படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தெல் அவீவ் விமான நிலையத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் 7ம் திகதிக்கு முன்னதாக இஸ்ரேலுக்கு பயணங்களை மேற்கொள்வதற்காக விமான பயணங்களை திட்டமிட்டு உள்ளவர்கள் தங்களது பயணங்களை மீள திட்டமிட்டுக் கொள்ளுமாறு தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இதேவேளை, இஸ்ரேலில் வசித்து வரும் இலங்கையர்கள் பாதுகாப்பான இடங்களில் இருப்பதாகவும் எதிர்காலத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தூதுவர் அறிவித்துள்ளார்.

முடிந்த அளவு தங்களது பயணங்களை வரையறுத்துக் கொள்ளுமாறும் வீடுகளிலேயே தங்கி இருக்குமாறும் இஸ்ரேல் அரசாங்கம் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

எதிர்காலத்தில் தாக்குதல்கள் அதிகரித்தால் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு நிலக்கீழ் பதுங்கு குழிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இவற்றில் வைத்தியசாலை வசதிகள் உள்ளதாகவும் இஸ்ரேல் அரசாங்கம் அறிவித்துள்ளது.

Comments are closed.