பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேவைப்படும் நிதியை விடுவிப்பதற்கான ஆவணத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார்.
இதன்படி, பொதுத் தேர்தலுக்காக தேவைப்படும் மொத்த நிதித் தொகையாக எதிர்பார்க்கப்படும் 11 பில்லியன் ரூபா ஜனாதிபதியால் விடுவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பிலான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறும் என்றும் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் அக்டோபர் 4 எனவும் அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.
அத்தோடு, நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்று முடிந்தவுடன் புதிய நாடாளுமன்றம் நவம்பர் 21 ஆம் திகதி கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Comments are closed.