பாணந்துறை பள்ளியமுல்ல பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பொலிஸ் வீதித்தடையில் லொறி ஒன்றை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகத்திற்கிடமான வகையில் லொறி நிற்காமல் முன்னோக்கிச் சென்றதால் பொலிஸார் அதனை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதில் லொறியில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ள நிலையில், அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த லொறியானது மாடுகளை ஏற்றப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Comments are closed.