தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 3 கேள்விகளுக்கு மாத்திரம் முழு மதிப்பெண் வழங்குவதை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் பத்தரமுல்லையில் அமைந்துள்ள இலங்கை பரீட்சை திணைக்களத்திற்கு முன்பாக இன்று (30.09.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை மீண்டும் நடாத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் முன்னெடுக்கப்படும் முதல் போராட்டம் இது ஆகும். இந்நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் போது முன்கூட்டியே பகிரப்பட்டதாகக் கூறப்படும் வினாத்தாளில், சம்பந்தப்பட்ட மூன்று கேள்விகளுக்கு மாத்திரம், அனைத்து மாணவர்களுக்கும் முழு மதிப்பெண் வழங்க நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி, முடிவு எடுக்கப்பட்டது.
பரீட்சையை மீண்டும் நடத்துவது 10 வயதேயான பிள்ளைகளின் மன நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
Comments are closed.