அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் சந்தைக்கு அரிசியை விநியோகிக்க பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரலிய கூட்டுறவு வர்த்தக தலைவர் டட்லி சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நிபுண மற்றும் நிவ் ரத்ன வர்த்தக தலைவர்களுடன் கலந்துரையாடியதாகவும் அவர்கள் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஜனாதிபதி நாட்டிற்குள் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் நேற்று முதல் அனைத்து அரிசி வகைகளையும் அரசின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் சந்தைக்கு விநியோகிக்க தீர்மானித்துள்ளதாக கூறியுள்ளார்.
Comments are closed.