போர்ட் சிட்டியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சீனாவின் டியூட்டி ப்ரீ வர்த்தக நிறுவனம்

9

சீனாவின் வணிக குழுமமான, சைனா டியூட்டி ப்ரீ குழுமம் (CDFG)) தனது சர்வதேச விஸ்தரிப்பில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில் இலங்கையில் தனது முதல் டியூட்டி ப்ரீ வணிக நிறுவனத்தை ஆரம்பித்துள்ளது.

கொழும்பு போர்ட் சிட்டியில் உள்ள “தி மோல்” இல் அமைந்துள்ள cdf Sri Lanka Duty Free Storeஇல் இந்த வணிகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட வர்த்தக நாமங்களின் பரந்த அளவிலான உயர்தர தயாரிப்புகள் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

நாகரீக பொருட்கள், ஆடம்பர கடிகாரங்கள், நகைகள், அழகு சாதனப்பொருட்கள், வாசனை திரவியங்கள், சிறப்பு உணவுகள் மற்றும் நினைவுப் பொருட்கள் உட்பட்டவை அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இது, CDFG அமைந்துள்ள தெற்காசிய முதல் சந்தையாகும். CDFG, ஹொங்காங், மக்காவ், சிங்கப்பூர் மற்றும் கம்போடியாவில் தனது உலகளாவிய இருப்பை விரிவுபடுத்தி வருகிறது.

Comments are closed.