திலித் ஜயவீரவின் கட்சியில் இணைந்த முன்னாள் அமைச்சர்

6

முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, வர்த்தகர் திலித் ஜயவீர தலைமையிலான மௌபிம ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.

இதனையடுத்து, மௌபிம ஜனதா கட்சியின் தேசிய அமைப்பாளராக அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளதாக ஜயவீர தெரிவித்துள்ளார்.

மௌபிம ஜனதா கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலும் அமுனுகமவை நான் அன்புடன் வரவேற்கின்றேன்.

அத்துடன், பொதுத் தேர்தலில் எங்களின் அடுத்த போருக்கு நாங்கள் தயாராகி வருகிறோம் என்று ஜெயவீர தமது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஜனாதிபதி தேர்தலில் திலும் அமுனுகம முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.