அரசியல்வாதிகள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

11

இலங்கையில் சமூக வலைத்தளங்களில் அதிக செல்வாக்கு கொண்ட அரசியல்வாதிகளின் விபரங்கள் வெளியாகி உள்ளன.

அதில் முகநூலில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட இலங்கையின் 6வது அரசியல்வாதியாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இடம்பிடித்துள்ளார்.

அவருடன் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரும் அதிகளவிலான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளனர்.

இவர்களில் அதிக எண்ணிக்கையிலான முகப்புத்தக பின்தொடர்பவர்களைக் கொண்ட இலங்கை அரசியல்வாதியாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 1.4 மில்லியனும், அவரது மகன் நாமல் ராஜபக்ச 1.3 மில்லியன் பின்தொடர்பவர்களையும் கொண்டுள்ளனர்.

Comments are closed.