இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் இன்று காலை பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த வரலாற்று மாற்றம் அமெரிக்க, இந்திய புலனாய்வு துறைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அநுரகுமார திசாநாயக்கவின் புலனாய்வு துறையும் எதிர்பார்க்காத விதத்தில் அதிக்கூடிய வாக்கு வித்தியாசத்தில் அநுர ஆட்சியை கைப்பற்றியுள்ளார்.
அதாவது தேசிய மக்கள் சக்தியின் (jvp) இலங்கை அரசியலில் முதல் எதிரியாக காணப்படும் நாடு இந்தியா. கடந்த வரலாற்றில் 1980 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கினை இரண்டாக பிரித்து இலங்கை மண்ணிலிருந்து இந்திய இராணுவத்தை விரட்டுவதே இக்கட்சியின் முதலாவது அனுகூலமாக காணப்பட்டது.
21 ஆம் நூற்றாண்டில் அவர்களை சுட்டிக்கொல்ல சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் இறக்கப்பட்டவர்களும் இந்திய இராணுவத்திரே. எனவே இந்திய இராணுவத்தினரை நாட்டிலிருந்து விரட்டுவதே தேசிய மக்கள் சக்தியின் முதல் கோரிக்கையாக காணப்பட்டது.
தற்போது ஆட்சியை கைப்பற்றியுள்ளதுடன், இரண்டு போராட்டங்களில் நேரடியாக பாதிக்கப்பட்ட பின்னணியில் இந்தியா உள்ளதென்பதினை நன்கும் அறிந்துள்ளனர்.
அந்த வகையில் முதலில் அரகலய போராட்டத்தின ஊடாக உறவினை பேணிய அமெரிக்காவிற்கு அந்த உறவினை தொடர்ந்தும் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தற்போது இலங்கை அரசியல் மாற்றத்தினால் அநுர குமாரவை தமது பக்கம் கொண்டுவரும் நிர்ப்பந்தம் அமெரிக்க, இந்தியாவிற்கு உள்ளதுடன், சீனா அமைதியான முறையில் நகர்வுகளை முன்னெடுப்பதாகவும் கூறப்படுகின்றது.
Comments are closed.