முப்படைத் தளபதிகளை அழைத்துப் பேசிய ஜனாதிபதி அநுர! விசேட கமாண்டோக்கள் பணியில்

6

முப்படைத் தளபதிகளுடன் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகபூர்வமாக  நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாமுடைய ஜனாதிபதியாக  அநுர குமார திஸாநாயக்க  பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனையடுத்து நாட்டின் சட்டம் ஒழுங்கை பேணிப் பாதுகாப்பது தொடர்பில் முப்படைத் தளபதிகளுடன் விசேட கலந்துரையாடலில் ஜனாதிபதி அநுர ஈடுபட்டுள்ளார்.

இதேவேளை, அவருடைய பாதுகாப்புக்கு விசேட கமாண்டோக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments are closed.