அமைதியான நேரத்தில் சமூக ஊடகங்கள் மூலம் தேர்தல் விதிமுறைகளை மீறுவது தொடர்பாக கண்காணிப்பு நிறுவனங்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் ஆணையர் எம்.ஏ.பி.சி. பெரேரா தெரிவித்துள்ளார் .
ஜனாதிபதி தேர்தலில் சட்டத்தை மீறி சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் அனைவரும் நீதிமன்றத்தில் பதில் அளிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பான சட்டத்தை நடைமுறைப்படுத்துவது போதுமானதாக இல்லாவிட்டாலும் இறுதி முடிவாக இவ்வாறானவர்கள் தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு பாரபட்சம் விளைவிக்கும் சட்டவிரோத விளம்பர திட்டங்களை நீக்குமாறு Meta, YouTube, Tiktok மற்றும் Google போன்ற சமூக ஊடக நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் சுமார் ஆயிரம் சமூக ஊடக பதிவுகளில் தேர்தல் விதிமுறைகளை மீறப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏற்கனவே இந்த விடயம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.