தேவை ஏற்பட்டால் ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் : அரசாங்கம் அறிவிப்பு

11

தேவை ஏற்பட்டால் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் வன்முறை வெடித்தால் அது கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ்(Tiran Alles) இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“ஜனாதிபதி தேர்தல் அமைதியாக நடைபெற்று வருகின்றது, இந்த சூழலைப் பேணுமாறு பொதுமக்களிடமும் அரசியல் கட்சித் தலைவர்களிடமும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

ஜனாதிபதி தேர்தலின் போது தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம்” என்று அமைச்சர் அலஸ் கூறினார்.

ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 07 மணிக்கு ஆரம்பமானது.இந்த வாக்களிப்பு மாலை 04 மணியுடன் நிறைவடையவுள்ளது.

இந்த தேர்தல் நிறைவடைந்த பின்னர் வன்முறை வெடிக்கும் என்ற அச்சத்தில் ஊரடங்கு சட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Comments are closed.