இரத்தினபுரி, சீவாலி மத்திய கல்லூரி வாக்களிப்பு நிலையத்தில் சமகி ஜன பலவேக (SJB) சார்பில் பார்வையாளராக இருந்த அறுபத்தெட்டு வயதுடைய நபர் ஒருவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக இரத்தினபுரி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் ஒய்.ஏ. வன்னியாராச்சி, இரத்தினபுரி புதிய நகரம் ரிஷி சுமனகமவை வசிப்பிடமாகக் கொண்டவர்.
வாக்களிப்பு நிலையத்தில் பார்வையாளராக இருந்தவர் திடீரரென உயிரிழப்பு | Police Officer Dies On Election Duty
இச்சம்பவம் இன்று காலை எட்டு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் நெஞ்சுவலி காரணமாக உடனடியாக இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அவரது சுகயீனம் வாக்களிப்பு நிலையத்தின் வாக்களிப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தவில்லை என இரத்தினபுரி மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
வாக்களிப்பு நிலையத்தில் கடமையாற்றிய காவல் உத்தியோகத்தரொருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலன்னறுவை புலஸ்திபுர விஜித ஆரம்ப பாடசாலையின் வாக்களிப்பு நிலையத்தில் கடமையாற்றிய காவல் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும், பொலனறுவை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் இன்று (21) பிற்பகல் உயிரிழந்ததாக புலஸ்திபுர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த திடீர் மரணம் தொடர்பில் பொலனறுவை சிரேஷ்ட காவல் அத்தியட்சகர் நிஷான் டி சில்வாவின் ஆலோசனையின் பேரில் புலஸ்திபுர காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, தேர்தல் கடமைகளுக்காக சுமூகமான மற்றும் பாதுகாப்பான வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக சுமார் 63,000 காவல்துறை உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.