யாழில் வாக்குச்சீட்டை கிழித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி

6

யாழ்ப்பாணம் – நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியசாலையில் வாக்களிக்க சென்ற இளைஞர் ஒருவர் வாக்குச் சீட்டை சேதப்படுத்தியமை தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று இடம்பெற்றுவரும் நிலையில், வாக்கெடுப்பு உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்ட வாக்குச் சீட்டையே குறித்த இளைஞர் இரண்டாக கிழித்துள்ளார்.

தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்களின் முறைப்பாட்டுக்கமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் (Jaffna) – நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியசாலையில் வாக்களிக்க சென்ற இளைஞர் ஒருவர் வாக்குச் சீட்டை கிழித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

யாழில் வாக்குச்சீட்டை கிழித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி | Young Man Tore Up The Ballot Paper In Jaffna

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று இடம்பெற்றுவரும் நிலையில், வாக்கெடுப்பு உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்ட வாக்குச் சீட்டையே குறித்த இளைஞர் இரண்டாக கிழித்துள்ளார்.

குறித்த நபரிடம் யாழ்ப்பாணம் தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்புரைக்கமைய அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இளைஞர் தேர்தலில் வாக்களிப்பது இதுவே முதல் தடவை என விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.