திருமணத்திற்கு பின் அது கிடைப்பது இல்லை.. நயன்தாரா பற்றி பேசிய நடிகை காஜல் அகர்வால்

17

தென்னிந்திய அளவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் காஜல் அகர்வால். இவர் நடிப்பில் தற்போது  இந்தியன் 2 மற்றும் 3 ஆகிய படங்கள் உருவாகியுள்ளது.

சமீபத்தில் நடந்த  இந்தியன் 2 இசை வெளியிட்டு விழாவில் காஜல் கலந்துகொண்டு இருந்தார். திருமணமாகி குழந்தை பிறந்த பிப்பும் பிசியாக நடித்து வரும் நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

“பாலிவுட் சினிமாவிற்கு தென்னிந்திய சினிமாவிற்கும் இடையே நிறைய பாகுபாடு இருக்கிறது. இந்தியில் திருமணத்திற்கு பின்பும் கதாநாயகியாக நடித்து வருகிறார்கள். தீபிகா படுகோன், ஆலியா பட் ஆகியோரும் நல்ல கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்”.

“ஆனால், தென்னிந்திய சினிமாவில் திருமணமான நடிகைகளுக்கு படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைப்பது இல்லை. இந்த விஷயத்தில் நடிகை நயன்தாரா விதிவிலக்காக இருக்கிறார். அவருடைய படங்கள் தேர்வும், கதை தேர்வும் எனக்கு பிடித்த விஷயம். திருமணமான நடிகைகளை தென்னிந்திய சினிமா ஓரம் காட்டுகிறது. இந்த நிலையை விரைவில் மாற்றுவோம்”.

“இந்த தலைமுறை நடிகைகள் திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும் கூட நடித்து வருகிறார்கள். ரசிகர்களின் பார்வையில் மாறி இருக்கிறது. நல்ல கதை உள்ள படங்களில் யார் நடித்தாலும் அவர்கள் அதனை ரசித்து பார்க்கிறார்கள்” என காஜல் அகர்வால் பேசியுள்ளார்.

Comments are closed.