இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் : கண்டுகொள்ளாத தமிழ் நாட்டின் அகதிகள்

9

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் உள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு முகாம்களில் வசிக்கும் தமிழ் அகதிகள் மத்தியில் இந்தச் சூழல் எந்த சலசலப்பையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை என்று இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

அகதிகள் தங்களின் உடனடி மற்றும் அன்றாட பிரச்சினைகளில் அதிக அக்கறை காட்டுவதால், இந்த விஷயத்தில் அதிக அக்கறை காட்டவில்லை என்று கருத்தப்படுகிறது

இலங்கையில் தேர்தல் இடம்பெறவுள்ளது என்பது கூட, முகாம்களில் இருக்கும் பலருக்குத் தெரியாது. சொல்லப்போனால், இலங்கையின் அரசியல் ரீதியாக என்ன நடக்கிறது என்பது கூட தெரியவில்லை என்று அகதிகளில் சிலர் கூறியுள்ளனர்

முகாம்களில் வசிக்கும் அகதிகளில் கணிசமான பகுதியினரான, சுமார் 58,000 பேர் இந்தியக் குடியுரிமைக்கான வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

எனவே அவர்களுக்கு இலங்கை விடயங்களை பற்றி அக்கறை இல்லை என்று களத் தகவல்கள் கூறுகின்றன.

அதே நேரத்தில், கன்னியாகுமரியில் உள்ள முகாம் ஒன்றில் 40 பேர், சென்னையில் உள்ள இலங்கை துணை உயர் ஸ்தானிகராலயத்தால் வழங்கப்படும் அனைத்து நாட்டிற்கான கடவுச்சீட்டுகளைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதன் மூலம் அவர்கள் இலங்கைப் பிரஜைகளாகக் கருதப்படுகின்றனர்

எனினும் அவர்களுக்கு இந்த தேர்தலில் வாக்களிக்க வாய்ப்பில்லை.

முன்னதாகவே தமது  வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கு ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம் என்று அவர்கள் கருத்துரைத்துள்ளனர்.

Comments are closed.