தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் அருண் விஜய் நடிப்பில் அடுத்ததாக வணங்கான் திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தை பாலா இயக்கியுள்ளார். முதலில் இப்படத்தில் சூர்யா ஹீரோவாக நடிப்பது வந்தார்.
படப்பிடிப்பு கூட விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால், திடீரென சூர்யா இப்படத்திலிருந்து வெளியேறிவிட்டார். பாலா மற்றும் சூர்யாவிற்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு தான் இப்படத்திலிருந்து சூர்யா வெளியேற காரணம் என கூறப்பட்டது.
ஆனால், அப்படி எதுவும் இல்லை என கூறி இயக்குனர் பாலா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். சூர்யா வெளியேறியதை தொடர்ந்து இப்படத்தில் அருண் விஜய்யை ஹீரோவாக நடிக்க வைக்க முடிவு செய்தார் பாலா.
அதன்படி, அருண் விஜய்யை வைத்து தற்போது வணங்கான் திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த நிலையில், வணங்கான் திரைப்படத்தை மலைபோல் நம்பி காத்திருக்கிறாராம் அருண் விஜய்.
ஏனென்றால் தற்போது ஒரு படத்தில் நடிக்க ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் அருண் விஜய், வணங்கான் திரைப்படத்தின் வெற்றிக்குப்பின் ரூ. 8 கோடியாக தனது சம்பளத்தை உயர்ந்த முடிவு செய்துள்ளாராம். இந்த தகவல் பிரபல பத்திரிகையாளர் ஷக்தி என்பவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.