நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 355 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 லீற்றர் பெட்ரோலின் விலை மாற்றமின்றி 420 ரூபாவாகும்.
ஒரு லீற்றர் டீசலின் விலை 16 ரூபாவினால் குறைந்துள்ளதுடன் அதன் புதிய விலை 317 ரூபாவாகும்.
அத்துடன், சிலோன் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலையில் மாற்றமின்றி தொடர்ந்தும் அதன் விலை 377 ரூபாவாகும்.
மண்ணெண்ணெய் விலை 13 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 202 ரூபாவாகும்.
எரிபொருள் விலையில் இன்று (31) நள்ளிரவு முதல் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments are closed.