குவைட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை கலைஞர்கள் உள்ளிட்ட 26 பேரில் 24 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சு இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது.
குவைட் அதிகாரிகள் 24 இலங்கையர்களை கைது செய்துள்ளதாக, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் தனது X கணக்கில் பதிவொன்றினை இட்டு இதனை தெரிவித்துள்ளார்.
குவைட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “Sri Lankan Summer Nights” இசை நிகழ்ச்சியில் இந்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இசை நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் மற்றும் இசைக்கலைஞர்களும் உள்ளடங்குவதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து குவைட்தூதரகத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.