பொலிஸ் திணைக்களத்தின் கீழ் அதிரடிப் பாய்ச்சல் படைப்பிரிவொன்றை உருவாக்க பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தீர்மானித்துள்ளார்.
குறித்த அதிரடிப் பாய்ச்சல் படைப்பிரிவானது, நேரடியாக பொலிஸ் மா அதிபரின் கண்காணிப்பின் கீழ் செயற்படும்.
அத்துடன் இலங்கையில் உள்ள 607 பொலிஸ் நிலையங்களில் எந்தவொரு பொலிஸ் நிலையத்துக்கும் முன்னறிவித்தல் இன்றி வருகை தந்து , பொலிஸ் நிலைய செயற்பாடுகளை பரிசீலனைக்கு உட்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும்.
இதற்கான கட்டளை அதிகாரியாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.
அவரின் கீழ் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களின் தலைமையில் இந்தப் படைப்பிரிவு பல்வேறு அணிகளாக உருவாக்கப்படவுள்ளது.