வாட்ஸ்அப் (WhatsApp) போன்ற சமூக ஊடகங்கள் ஊடாக ஒன்லைன் நிதி மோசடிகளில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள், பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
[email protected] ஊடாக பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மின்னஞ்சல்களை அனுப்பி முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் என்று அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக கணக்குகளை ஊடுருவதன் மூலம் பொதுமக்கள் நிதி மோசடி செய்யப்படுவதாக பல புகார்கள் வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இணைப்புகளைத் திறக்கவோ அல்லது ஒரு முறை கடவுச்சொற்கள் (OTP/ PIN), குறியீடுகள் அல்லது SMS அல்லது WhatsApp செய்திகள் மூலம் அனுப்பப்படும் நிதி உதவிக்கான கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கவோ வேண்டாம் என்றும் பொதுமக்களை அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
Comments are closed.