ரணில் நாடாளுமன்றை கலைத்தால் ஏற்படப்போகும் ஆபத்து

8

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (ranil wickremesinghe)நாடாளுமன்றை கலைத்தால் அது பெரும் ஆபத்தாக முடியும் என தேசிய மக்கள் சக்தி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தேசிய மக்கள் சக்தி (NPP) ஊடக சந்திப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் புதிய ஜனாதிபதி நாட்டை ஆட்சி செய்ய அரசியலமைப்பில் ஏற்பாடுகள் உள்ளதாகவும் அது மக்களுக்கும் நாட்டுக்கும் பாதகமான விளைவுகளை உருவாக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், ஜனநாயக கட்டமைப்பிற்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஜனாதிபதிக்கான அதிகார பரிமாற்றம் மக்களுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தாமல் ஜனநாயக ரீதியாக நடைபெற வேண்டும் என்று அவர் கூறினார்.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஜனாதிபதி செப்டம்பர் 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைப்பார் என பிரதமர் சூசகமாக வெளியிட்ட விடயம் தொடர்பாக பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Comments are closed.