ஷேக் ஹசீனாவிற்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்: அனைத்து தூதரக கடவுச்சீட்டுகளும் ரத்து

12

பங்களாதேஷ் (Bangladesh) முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் (Sheikh Hasina) அனைத்து தூதரக கடவுச்சீட்டையும் அந்நாட்டு இடைக்கால அரசு ரத்துச் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்ட வன்முறையில் 400 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன், அந்நாட்டு பிரதமர் பதவியிலிருந்து விலகிய ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் (India) தஞ்சமடைந்துள்ளார்.

இந்த நிலையில் பங்களாதேசில் முகமது யூனுஸ் (Muhammad Yunus) தலைமையிலான இடைக்கால அரசு, ஷேக் ஹசீனாவின் அனைத்து நாடுகளின் கடவுச்சீட்டுகளையும் ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர்கள் அனைவரது கடவுச்சீட்டுளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவில் இருக்கும் பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வேறு நாட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.