நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் நிலையில் அரசியல் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் களமிறங்கி இருக்கிறார்.
அதனால் தற்போது நடித்து வரும் ஜனநாயகன் படம் தான் தனது கடைசி படம் என ஏற்கனவே அறிவித்துவிட்டார். விஜய் சினிமாவை விட்டு சென்றால் சினிமாவில் ஒரு வெற்றிடம் உருவாகும் என ஏற்கனவே பேச்சு எழுந்து வருகிறது.
இந்நிலையில் பிரபல காமெடி நடிகரும், இயக்குனருமான சிங்கம் புலி செய்தியாளர்களை சந்தித்த போது விஜய் பற்றிய கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார்.
“யார் இருந்தாலும் இல்லை என்றாலும் சினிமா நகர்ந்துகொண்டே இருக்கும். ஒருவர் சென்றுவிட்டால் இன்னொருவர் வருவார்” என சிங்கம்புலி கூறி இருக்கிறார்.