இலங்கையில் விற்பனை செய்யப்படும் தேங்காய் எண்ணெய் தொடர்பான அதிர்ச்சித் தகவல்

0 0

வெளிநாடுகளில் அகற்றப்படும் கழிவு தேங்காய் எண்ணெய் இலங்கை சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக, ருஹுணு பல்கலைக்கழகத்தின் உணவு மற்றும் தொழில்நுட்ப பீடத்தின் பேராசிரியர் நிலந்த லியனகே தெரிவித்துள்ளார்.

வெள்ளை தேங்காய் எண்ணெய் என்று விற்கப்படுவது வெளிநாடுகளில் உள்ள ஹோட்டல்களில் உணவை பொரித்த பிறகு அகற்றப்படும் எண்ணெய் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தும் எந்தப் பலனும் இல்லை என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கரந்தெனிய சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தின் நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் தீபால் ரொஷான் குமார விதானச்சி சுட்டுக் கொல்லப்பட்டதன் ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் காலி மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் சங்கம் ஒரு நினைவு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

அங்கு உரையாற்றும் போது பேராசிரியர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். நச்சுத்தன்மையற்ற உணவுகளைத் தேர்ந்தெடுப்பது குறித்த கண்காட்சியும் இதற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டது.

சிறுவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் திரிபோஷாவில் புற்றுநோயை உண்டாக்கும் அப்லாடாக்சின்கள் இருப்பது குறித்து கடந்த சில ஆண்டுகளாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.

மேலும் இந்த பிரச்சினை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.