ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ரஷ்யாவின் இரகசிய நகர்வு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0 1

மேற்கு நாடுகள் மீதான தாக்குதலின் அடுத்த கட்டத்தில் ஐரோப்பாவில் (Europe) பெருமளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் பயங்கரவாத தாக்குதல்களை ரஷ்யா திட்டமிடலாம் என முன்னணி பாதுகாப்பு நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்ய (Russia) படையெடுப்பை அடுத்து ஐரோப்பிய நாடுகள் உக்ரைனை தொடர்ந்து ஆதரித்து வரும் நிலையில், ரஷ்யாவின் மறைமுக போரில் ஐரோப்பாவின் அப்பாவி பொதுமக்கள் பலியாக வாய்ப்புள்ளது என குறித்த நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போலந்துக்கு (Poland) எதிராக வான்வழியாக பயங்கரவாதச் செயல்களை ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk) பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ள நிலையிலேயே மேற்படி இதன் பின்னணியை விளக்கியுள்ளார்.

பிரித்தானியாவின் (United Kingdom) பர்மிங்காமில் உள்ள ஒரு கிடங்கில் பொதி ஒன்று திடீரென தீப்பிடித்த சம்பவத்தை குறிப்பிட்டு போலந்து பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜேர்மனி மற்றும் போலந்தில் உள்ள சரக்கு விமானங்களிலும் சந்தேகத்திற்கிடமான பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பிரித்தானிய உளவு அமைப்புகலும் CIA ஐயும் இந்த திட்டத்தை ரஷ்யாவே முன்னெடுத்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளதுடன் ரஷ்யா திட்டவட்டமாக இதனை மறுத்துள்ளது.

முன்னதாக பனிப்போர் காலகட்டம் முழுவதும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ஆயுதமேந்திய தாக்குதல்களை நடத்திய பயங்கரவாத இயக்கங்களுக்கு ரஷ்யா நிதியுதவி அளித்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ள குறித்த நிபுணர், தற்போது இந்த விமானப் பொதி திட்டங்களுடன் பெருமளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் ரஷ்யாவின் சதி மீண்டும் திரும்பியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பா முழுவதும் ரஷ்ய அரசு பயங்கரவாத தாக்குதல்கள் விரைவில் அதிகரிக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம் என தெரிவித்துள்ள அவர் ஐரோப்பாவில் ரஷ்ய நாசவேலைகள் குறித்து நோர்டிக் மற்றும் பால்டிக் நாடுகள் பல ஆண்டுகளாக எச்சரிக்கை விடுத்து வந்தாலும் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நோர்டிக் மற்றும் பால்டிக் நாடுகளின் எச்சரிக்கைகள் சரி என்பதற்கான தொடர்ச்சியான சான்றுகள் இருந்த போதிலும், யாரும் இன்னும் அவற்றைக் கேட்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என குறித்த நிபுணர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.