ரஷ்யாவிற்கு அருகில் சிங்கப்பூரின் கடற்கரைக்கு வெளியே மற்றும் சீன துறைமுகங்களுக்கு அருகில் டசன் கணக்கிலான எண்ணெய் டேங்கர்கள் நீரில் நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா கடந்த வாரம் ரஷ்யாவின் வருவாயை குறைக்க, ரஷ்யாவால் மேற்கத்திய எண்ணெய் விலை வரம்புகளைத் தவிர்ப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 183 “Shadow fleet” கப்பல்களை குறிவைத்து தடைகளை விதித்தது.
இந்த நிலையில் ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், ரஷ்ய எண்ணெய்யை ஏற்றிச் செல்லும் டசன் கணக்கான டேங்கர்கள் செயலற்ற நிலையில் சிக்கிக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
அதிலும், ரஷ்யாவிற்கு அருகில் சிங்கப்பூரின் கடற்கரைக்கு வெளியே மற்றும் சீன துறைமுகங்களுக்கு அருகில், குறைந்தது 65 எண்ணெய் டேங்கர்கள் நீரில் நின்று கொண்டிருந்தன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இந்தியா மற்றும் சீனா ரஷ்யா அல்லாத மூலங்களில் இருந்து இறக்குமதியை அதிகரிப்பதால், அனுமதி பெற டேங்கர் கப்பல்கள் இந்த இடைவெளியை நிரப்ப வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.
2023ஆம் ஆண்டில், ரஷ்யா குறைந்தது 600 நிழல் கடற்படை டேங்கர்களை இயக்குவதாக நம்பப்பட்டது.
ஆனால், அமெரிக்காவின் புதிய தடைகளால் உலகளாவிய எண்ணெய் டேங்கர்கள் கடற்படையில் சுமார் 10 சதவீதம் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.