நாட்டில் சில பகுதிகளில் முட்டை விலை மிக வேகமாக குறைந்து வருவதாக முட்டை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்தவகையில், ஜாஎல, கந்தானை மற்றும் ராகம உள்ளிட்ட பிரதேசங்களில் முட்டையின் விலை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, முன்னர் 40 ரூபாய் தொடக்கம் 45 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது 25 ரூபாய் தொடக்கம் 30 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு முட்டையொன்றை 30 முதல் 35 ரூபாவிற்கு சில்லறை விலையில் விற்பனை செய்ய அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தால் தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில், சராசரியாக 50 கிராமுக்கு குறைவான எடையுள்ள முட்டையை 30 ரூபாய் முதல் 32 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கலாம் என அந்த சங்கத்தின் தலைவர் என்டன் அப்புஹாமி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.