கடந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (University Grants Commission) தெரிவித்துள்ளது.
இந்த காலப்பகுதிக்குள் சுமார் 40,000 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு, இந்த ஆண்டு 43,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யாத மாணவர்களுக்கு பதிலாக வேறு மாணவர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.