இன்றைய ராசி பலன் 28.07.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

12

இன்றைய ராசிபலன் ஜூலை 28, 2024, குரோதி வருடம் ஆடி 12, ஞாயிற்று கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். கன்னி ராசியில் உள்ள சேர்ந்த உத்திரம், அஸ்தம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். எல்லா பணிகளும் சிறப்பாக நிறைவேற்றும் திறன் உடன் செயல்படுவீர்கள். இன்று உங்கள் வீட்டிற்கு விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும். உங்களின் முயற்சிகள் அனைத்திலும் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பிள்ளைகளின் வேலை தொடர்பாக முயற்சிகள் வெற்றி அடையும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று பரபரப்பான நாளாக இருக்கும். இன்று உங்களின் உணவு மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இல்லை எனில் தேவையற்ற உடல் நலப் பிரச்சனையே எதிர்கொள்ள நேரிடும். இன்று குடும்பத் தொழில் தொடர்பான விஷயத்தில் பெரியவர்களின் ஆலோசனை நல்ல பயன் தரக்கூடியதாக இருக்கும். உங்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்கள் கடின உழைப்பு ஏற்ற பலன் பெறுவீர்கள்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். உங்கள் செயலில் நேர்மறையான சிந்தனையுடன் செயல்படுவீர்கள். அரசியல் தொடர்புடையவர்களுக்குப் பதவி கிடைக்கும். உங்கள் பிள்ளைகளிடமிருந்து சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். முயற்சிக்கு உங்களின் மனைவியிடம் வழிகளிலும் உதவுவார். சொத்து சம்பந்தமான விஷயத்தில் வாதங்களை ஏற்படும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று தேவையற்ற செலவுகளை குறைக்க வேண்டிய நாள். இன்று உங்களின் நிதி நிலைமை சுமையை ஏற்படுத்தும். மாணவர்களின் கலை, விளையாட்டு வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். இன்று குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்கள் பணியிடத்தில் எல்லா வழிகளிலும் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் சிறு கருத்து வேறுபாடு ஏற்படும்

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் கொடுத்த கடன் தொகை திரும்ப கிடைக்கும். குடும்பத்தில் சில அமைதியின்மை சூழல் இருக்கும். இன்று உங்கள் வேலைகளை முடிப்பதில் தைரியத்துடனும், பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். இன்று முதலீடுகள் விஷயத்தில் அவசரம் காட்ட வேண்டாம். கவனமாக செயல்பட வேண்டியது அவசியம். இன்று உங்களின் செயல்பாடு மற்றும் நிதி விஷயத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை பெறுவீர்கள்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் சொத்து சம்பந்தமான மனக்கசப்புகள் ஏற்படும். இன்று உங்களின் பேச்சை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். வியாபாரத்தில் சில நிதி ஆதாரங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வேலை தொடர்பான தடைகள் நீங்கும். உங்களின் தடைப்பட்ட வேலைகள் முன்னேற்றப் பாதையில் செல்லும். மாணவர்கள் படிப்பு தொடர்பாக கடினமாக உழைக்க வேண்டிய நாள்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பான விஷயத்தில் லாபம் கிடைக்கும். குழந்தைகளின் வேலை தொடர்பாக மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். இன்று குடும்பத்தில் சில சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். பொருளாதாரம் பெருகுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று அரசியல், சமூகத்துறையில் உள்ளவர்களுக்கு கடின உழைப்பு மற்றும் தைரியம் தேவை. இன்று தாய் வழி சொந்தங்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வணிகத்தில் நல்ல வாய்ப்புகள் பெறுவீர்கள். உங்கள் முயற்சியில் புதிய வேகத்தைப் பார்ப்பீர்கள். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அன்றாட தேவைகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இன்று எந்த ஒரு விஷயத்திலும் பட்ஜெட் போட்டு செலவு செய்யவும். இன்று பயணங்கள் செல்ல வாய்ப்புள்ளது. அதன் மூலமாக அனுகூல பலனை பெறுவீர்கள். உங்கள் பேச்சு, செயலில் கவனம் தேவை. கோபத்தை கட்டுப்படுத்தவும். எதிர்காலம் தொடர்பான கவலைகள் அதிகரிக்கும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று கவனமாக முடிவுகளை எடுக்க வேண்டிய நாள். குடும்பம் மற்றும் பணியிடத்தில் அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். இன்று உங்களின் நிதி நிலையில் நஷ்டத்தை சந்திக்க வாய்ப்புள்ள. அரசியல் மற்றும் சமூகத் துறையில் உள்ளவர்களுக்கு புதிய தொடர்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்விக்காக செலவுகள் அதிகரிக்கும். காதலில் உறவு வலுப்படும்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று பண விஷயங்களில் கவனமாக செயல்படவும். எந்த ஒரு பெரிய பண பரிவர்த்தனையும் தவிர்ப்பது நல்லது. இன்று சில முக்கிய தேவைக்காக கடன் வாங்க வேண்டியது இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகளை நிறைவேற்ற வாய்ப்பு கிடைக்கும். குடும்ப தேவைகளை நிறைவேற்ற முடியும். உங்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று துணையின் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். சொத்து வாங்குதல் தொடர்பான விருப்பங்கள் நிறைவேற வாய்ப்புள்ளது. அது தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். அவர் உங்கள் வியாபாரத்தில் புதிய நடைமுறையை கையாள்வீர்கள். வாழ்க்கைத் துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் வரலாம். குடும்பத் தொழிலில் தந்தையின் மூலம் ஆதரவு கிடைக்கும்.

Comments are closed.