ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

0 2

ஆசிரியர்களுக்கான வருடாந்த இடமாற்றத்தை இந்த மாத இறுதிக்குள் மேற்கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (Ceylon Teachers’ Union) பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

அத்துடன் தேசிய பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்ட 12,000 ஆசிரியர்கள் இடமாற்றத்தை எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதில் பலர் பத்து வருடங்களுக்கு மேலாக ஒரே பாடசாலையில் சேவையாற்றியவர்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சிலர் நீண்ட காலமாக தூரப் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் கற்பிப்பவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடளாவிய ரீதியில் ஆசிரியர் சேவையில் மாத்திரம் முப்பதாயிரம் வெற்றிடங்கள் காணப்படுகிறாக அவர் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.