விமான நிலையத்தின் நாணய மாற்று கருமப்பீட ஏலம் : ஐந்து நிறுவனங்கள் தெரிவு

12

கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) மூன்று வருட காலத்திற்கு நாணய மாற்று கருமப்பீடங்களை இயக்குவதற்கான ஏலத்தில் ஐந்து நிறுவனங்கள் வென்றுள்ளன.

அவற்றின் மொத்த ஏல மதிப்பு 2.3 பில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமாகும்.

இதன்படி, இலங்கை வங்கி 798.028 மில்லியன் ரூபாய்களுடனும், சம்பத் வங்கி 633.662 மில்லியன்களுடனும்,கொமர்சல் வங்கி 381.364 மில்லியன்களுடனும், தோமஸ் குக் லங்கா (பிரைவேட்) லிமிடெட் 299.064 மில்லியன்களுடனும்,ஹட்டன் நெசனல் வங்கி 225.689 மில்லியன் ரூபாய்களுடனும் ஏலத்தில் வென்று, நாணய மாற்று கருமப்பீடங்களை தக்கவைத்துள்ளன.

துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் விஜித ஹேரத் முன்வைத்த பிரேரணைக்கு அமைவாக நேற்று அமைச்சரவை இந்த ஒதுக்கீட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது.

முன்னதாக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் நிலையான கொள்முதல் குழு ஆகியவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏல ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருந்தன.

Comments are closed.