பென்சில்வேனியாவில் மீண்டும் மாபெரும் பேரணி: டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

12

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald trump) சமீபத்தில் அவர் தாக்கப்பட்ட பென்சில்வேனியாவில் (Pennsylvania) மீண்டும் மாபெரும் பேரணியை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் குடியரசுக்கட்சி சார்பில் அமெரிக்க(USA) ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் ஜூலை 13-ஆம் திகதி அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ட்ரம்ப் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானார்.

இந்த சம்பவத்தில் துப்பாக்கி குண்டுகள் டிரம்பின் காதில் பட்டது. ட்ரம்ப் திரும்பாமல் இருந்திருந்தால், துப்பாக்கி குண்டுகள் நேராக அவரது தலையில் சென்றிருக்கும். எனவே அவர் நூலிழையில் உயிர் தப்பினார்.

இந்நிலையில் பென்சில்வேனியாவில் மீண்டும் மாபெரும் பேரணியை நடத்தவுள்ளதாக அவரது சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில், “நான் சமீபத்தில் சுடப்பட்ட இடத்தில் பேரணி நடத்தப் போகிறேன். எங்கள் அன்பிற்குரிய தீயணைப்பு வீரர் கோரியின் நினைவாக மாபெரும் பேரணியை நடத்த உள்ளேன்.

இதற்காக பென்சில்வேனியாவின் பட்லருக்கு மீண்டும் செல்கிறேன். இந்த பேரணியின் முழு விவரம் விரைவில் தெரியவரும். விவரங்களுக்கு காத்திருங்கள்” என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

Comments are closed.