மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

0 6

நாட்டின் மின் கட்டண திருத்தம் தொடர்பான ஆய்வுகள் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் மின் உற்பத்திக்காக மின்சார சபைக்கு (Electricity Board) பெற்றுக் கொடுக்கப்படும் எரிபொருளுக்கான விலை விபரங்கள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிக்கைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (Public Utilities Commission) தெரிவித்துள்ளது.

அத்துடன் தங்களின் கோரிக்கைக்கு அமைவாக கிடைக்கப் பெற்றுள்ள குறித்த அறிக்கைக்கமைய மின் கட்டணத் திருத்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விரிவான ஆய்வறிக்கை எதிர்வரும் 17 ஆம் திகதி பொதுமக்களுக்கு வெளியிடப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் செயற்பாடுகள் 21 நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000000000

Leave A Reply

Your email address will not be published.