தேசிய பட்டியல் ஆசனம் : எரிவாயு சிலிண்டருக்குள் இழுபறி

17

எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணிக்கு கிடைத்த இரண்டு தேசியப்பட்டியல் பதவிகளுக்கு யாரை நியமிப்பது என்பதில் இழுபறி நிலை நீடிப்பதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளின்படி புதிய ஜனநாயக முன்னணிக்கு இரண்டு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் கிடைத்துள்ளன.

புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியலில் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன(dinesh gunawardena) மற்றும் புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகமாக இருந்த ஷர்மிளா பெரேரா(Sharmila Perera) ஆகியோரின் பெயர்கள் முன்னணியில் உள்ளன.

எனினும், புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இரு பதவிகளுக்கு நியமிக்கப்படுபவர்கள் தொடர்பில் இதுவரையில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.