வழமைக்கு திரும்பிய யாழ் – ஏ-9 வீதியூடான போக்குவரத்து

6

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட யாழ்ப்பாணம் – ஏ-9 வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

சீரற்ற காலநிலையால் ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகாமையில் உள்ள வீதியும் ஓமந்தை நகருக்கு அண்மித்த வீதியும் முற்றாக நீரில் மூழ்கியிருந்தன.

இந்நிலையில், தற்போது வௌ்ளநீர் வடிந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதன்படி, ஏ-9 வீதியில் பயணிக்கும் வாகனங்கள் வழமை போன்று வீதியில் பயணிக்க முடியும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Comments are closed.