தமிழர் பகுதியில் அதிரடியாக கைது செய்யப்பட்ட லண்டன் பெண்

14

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நபரொருவருக்கு சமூக வலைத்தளத்தில் அபகீர்த்தியை ஏற்படுத்தியதாக பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் லண்டனில் (London) இருந்து வவுனியாவிற்கு (Vavuniya) வருகை தந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், லண்டனில் வசித்து வரும் குறித்த பெண், வெளிநாட்டில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்துள்ளார்.

இந்தநிலையில், நபர் ஒருவர் தனது வாகனத்தை தரவில்லை எனத் தெரிவித்த பெண் அந்நபருக்கு எதிராக தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டு வந்துள்ளார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் தேர்தல் முடிந்த பின்னர் காவல்துறையில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த பெண்ணை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.