பொலிஸாரின் விசேட சோதனையில் சிக்கிய பொருட்கள்!

5

பூசா சிறைச்சாலையில் விசேட சோதனை நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் போது போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சிறை கூண்டினுள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 04 கிராம் 300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் , 01 கையடக்கத் தொலைபேசி மற்றும் தொலைபேசியின் துணை பாகங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Comments are closed.