ஜனாதிபதி தேர்தல் திகதி நாளை அறிவிக்கப்படும் சாத்தியம்

16

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி குறித்து நாளைய தினம் அறிவிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இது தொடர்பில் நாளைய தினம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என ஆணைக்குழு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல்கள் ஆணைக்குழு இன்றைய தினம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் வரையில் மாவட்ட ரீதியான தேர்தல் பணிகளை அதிகாரபூர்வமாக ஆரம்பிக்க முடியாது என மாவட்டச் செயலளார்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் இரண்டு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் வெவ்வேறு தினங்களில் நடத்தக் கூடிய ஆற்றல் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உண்டு என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

Comments are closed.