இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநர் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த இந்திய 2 திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
மாறாக கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. நெட்டிசன்களால் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டது. அதை கேம் சேஞ்சர் திரைப்படம் சரி செய்து, மாபெரும் வசூல் வேட்டையாடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படம் தோல்வியை சந்தித்துள்ளது.
5 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் உலகளவில் 5 நாட்களில் ரூ. 180 கோடி வசூல் செய்துள்ளது. இது மிகவும் குறைவான வசூல் என்றும், ரூ. 450 கோடிக்கும் மேல் வசூல் செய்தால் மட்டுமே இப்படம் பிரேக் ஈவன் ஆகும் என்றும் கூறப்படுகிறது.