நடிகர் விக்ரம் தற்போது அருண்குமார் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் வீர தீர சூரன் பாகம் 2. இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் பொங்கலுக்கு வெளிவரவிருந்த நிலையில், திடீரென தள்ளிப்போய்விட்டது. ஜனவரி 30 அல்லது 31ஆம் தேதி இப்படம் வெளிவரும் என கூறுகின்றனர்.
இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான அறிவிப்பு வெளிவந்த நிலையில், இதற்காக முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் கதநாயகியாக நடிக்க நடிகை சாய் பல்லவியை அணுகியுள்ளனர். ஆனால், தற்போது கால்ஷீட் இல்லாத காரணத்தினால் இப்படத்தின் வாய்ப்பை சாய் பல்லவி நிராகரித்து விட்டார் என கூறப்படுகிறது.
இதன்பின் நடிகை பிரியங்கா மோகன் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோரிடம் கதாநாயகியாக நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.