இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்: முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா…!

6

2024 நவம்பர் இன் முதல் 20 நாட்களில் 100,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக  இலங்கை  சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (Sri Lanka Tourism Development Authority) தெரிவித்துள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் , நவம்பர் 01-20 வரை மொத்தம் 120,961 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இதன்படி நவம்பர் 2024 இல், அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து (India) வருகை தந்துள்ளதுடன் அது 26,717ஆக பதிவாகியுள்ளது.

அதைத் தொடர்ந்து ரஷ்யா (Russia) 20,157ஆகவும், ஜெர்மனி (Germany) 9,444, பிரித்தானியா (United Kingdom) 7,715 மற்றும் அவுஸ்திரேலியா (Australia) 4,762 ஆக பதிவாகியுள்ளது.

இந்த காலகட்டத்தில் சீனா (China) , பிரான்ஸ், போலந்து, அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை பதிவாகியுள்ளது.

இந்த வருடத்தில் இதுவரை மொத்தம் 1,741,676 சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவு செய்யப்பட்டுள்ளதாக SLTDA மேலும் தெரிவித்துள்ளது.

Comments are closed.