முன்னாள் எம்.பி.க்களின் மோசடிகளை அம்பலப்படுத்துவதில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தரப்பு பின்வாங்குவாதாக இலங்கை அரசியலில் தற்போது சலசலப்புகள் மேலோங்கியுள்ளன.
ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் தேர்தல் பரப்புரை மேடைகளிலும் ஊடகங்கள் முன்பாகவும் அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளின் நடைமுறையானது மந்த நிலை கொண்டுள்ளதான விமர்சனங்கள் எதிர் தரப்பில் இருந்தும், சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் அண்மைக்காலங்களில் வெளிவர ஆரம்பித்துள்ளன.
இதற்கு ஏற்றல் போல் நேற்று முன்தினம் இடம்பெற்ற பொதுஜன பெரமுனாவின் அரசியல் கூட்டம் ஒன்றில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் நாமல் ராஜபக்சவும் குற்றங்களை அம்பலப்படுத்துமாறு அநுர தரப்புக்கு சவாலொன்றையும் விடுத்திருந்தார்.
இவ்வாறான விடயங்களை அடிப்படையாக கொண்டே அரசியல் ஆய்வாளர்களால் மேற்படி விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இவ்வாறான குற்றச்சாட்டுக்களை எதிர் தரப்பினரும் சமூக ஆர்வலர்களும் வெளிப்படுத்தும் இந்த சந்தர்ப்பத்தில் தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் லால் கந்தா முன்வைத்த சில கருத்துக்கள் மேலும் அரசியல் அரங்கங்களில் கேள்விகளை வெளிப்படுத்தியுள்ளது.
Comments are closed.